தெலுங்கு தேசத்தின் மருமகனாக போகிறேன்… விஷ்ணு விஷால் மகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (10:00 IST)
நடிகர் விஷ்ணு விஷால் ஜூவாலா கட்டாவை திருமணம் செய்யப்போவதை உறுதிப் படுத்தியுள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால், தனது மனைவி ரஜினியை கடந்த ஆண்டு விவாகரத்து செய்தார். அதன் பின்னர் தற்போது விளையாட்டு வீராங்கனையான ஜூவாலா கட்டாவை காதலித்து வருகிறார். இருவரும் அவ்வப்போது  சமூக வலைதளங்களில் தங்கள் ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் இப்போது அவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக சமீபத்தில் ஆந்திராவில் நடந்த காடன் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது பேசியுள்ளார்.

அந்த பேச்சில் ‘நாங்கள் இருவரும் விரைவில் இணைய உள்ளோம்.  விரைவில் தெலுங்கு தேசத்தின் அல்லுடுவாக (மருமகனாக) ஆகப் போகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்