லாக்டவுன் இல்லாத ஊருக்கு போலாமா? விஷாலின் கோக்கு மாக்கு ஐடியா!

Webdunia
திங்கள், 24 மே 2021 (16:49 IST)
விஷால் தனது புதிய படத்தின் ஷூட்டிங்கை எப்படியாவது விரைவில் தொடங்கிவிட வேண்டுமென்ற முடிவில் இருக்கிறராம்.

விஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் சரவணன் என்பவர் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் அறிவிப்பு குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. விஷாலின் 31வது திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் மீண்டும் விஷால்-யுவன்சங்கர்ராஜா கூட்டணி இணைந்துள்ளனர். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.

இந்நிலையில் இப்போது தமிழகத்தில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஷூட்டிங் நடத்த முடியாது என்பதால் ஊரடங்கு இல்லாத ஏதாவது ஒரு மாநிலத்துக்கு சென்று படப்பிடிப்பை நடததலாமா என விஷால் யோசித்தாராம். ஆனால் அதற்கு திரை தொழிலாளர்கள் அமைப்பான பெப்சி அனுமதி அளிக்காது என அவரின் நண்பர்கள் கூறியுள்ளனராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்