தொடர்ந்து தோல்வி அடையும் படங்கள்… கலக்கத்தில் விஷால் தயாரிப்பாளர்கள்

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (16:18 IST)
விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான வீரமே வாகை சூடும் திரைப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது.

விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் வெளியான மூன்றே நாட்களில் படுதோல்வி என்ற தகவல் வந்துள்ளது பிடித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஷாலின் ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் நெகட்டிவ் விமர்சனங்கள் குவியத் தொடங்கின.

கடந்த சில ஆண்டுகளாக விஷால் நடிப்பில் வெளிவந்த எந்த படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் விஷால் நடிப்பில் இப்போது உருவாகும் படங்களின் தயாரிப்பாளர்கள் பெரும் கலக்கத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எந்த வழியிலாவது பட்ஜெட்டைக் குறைக்கலாமா என்றும் யோசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்