விஷ்ணு விஷால் படத்தில் சிம்பு பாடிய பாடல் ரிலீஸ்!

ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (11:13 IST)
நடிகர் விஷ்ணு விஷால் நடித்த எப்ஐஆர் என்ற திரைப்படம் வரும் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தில் சிம்பு ஒரு பாடலை பட்டுள்ளதாக விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார்
 
எப்ஐஆர்  படத்தில் சிம்பு பாடிய பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்
 
ஏற்கனவே சிம்பு தனது சக நடிகர்களின் பல திரைப்படங்களுக்கு பாடியுள்ள நிலையில் தற்போது விஷ்ணு விஷாலுக்கும் ஒரு பாடல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்