விஷால்-ஆர்யாவின் ‘எனிமி’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (17:30 IST)
’ஈரம்’ இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் திரைப்படமான ‘எனிமி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பதும், இந்த படத்தில் நண்பர்களாக இருக்கும் விஷால் மற்றும் ஆர்யா எனிமிகளாக அதாவது விஷால் ஹீரோவாகவும் ஆர்யா வில்லனாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த படத்தில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தில் மிருணாளினி நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
 
‘எனிமி’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமன் இசையமைப்பில் ராஜசேகர் ஒளிப்பதிவில் ரவி வர்மா ஸ்டண்ட் இயக்கத்தில் ராமலிங்கம் கலை இயக்கத்தில் இந்த படம் வளர்ந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்