100 தொகுதிகளில் களமிறங்குகிறாரா விஷால்? விஷப்பரிட்சை!
திங்கள், 14 டிசம்பர் 2020 (16:54 IST)
நடிகர் விஷால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100 தொகுதிகளில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளோடு தேர்தலில் நிற்கப் போவதாக சொல்லப்படுகிறது.
நடிகர் விஷாலுக்கு தேர்தல் என்றாலே இறக்கை முளைத்துவிடும் போல. ஏற்கனவே நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஆகிய தேர்தல்களில் நின்று வெற்றி பெற்ற அவர், அதன் பின் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் நின்றார். ஆனால் அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போது அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட உள்ளார் என சொல்லப்படுகிறது. ஆனால் அவர் மட்டும் நிற்கவில்லையாம். அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் 100 பேரையும் சேர்த்து 100 தொகுதிகளில் நிற்கப் போகிறார் என சொல்லப்படுகிறது.