ஓவியாவை பிந்து அந்த விஷயத்தில் வீழ்த்துவார்: நடிகர் விமல் கணிப்பு!!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (20:24 IST)
பிக்பாஸ் பற்றி பேசாத வாய் தமிழகத்தில் இருப்பது சந்தேகம்தான். நிகழ்ச்சியை புகழ்ந்து பேசவில்லை என்றாலும் திட்டியாவது நிகழ்ச்சியை பற்றி சிலர் பேசி வருகின்றனர்.


 
 
இந்நிலையில் பிக்பாஸில் ஓவியாவிற்கு மக்கள் ஆதரவு அதிக அளவில் இருப்பதால் அவருக்கு போட்டியாக பிந்து மாதவி போட்டியாளராக கொண்டுவரப்பட்டார் என செய்திகள் வெளியாகின்றன.
 
இந்த இரு நடிகைகளுடனும் படங்களில் நடித்தவர் விமல். ஓவியா மற்றும் பிந்து மாதவி குறித்து விமல் சமீபத்தில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ஓவியா, பிந்து மாதவி இருவருமே ஒரே குணங்கள் கொண்டவர்கள். அதனால், இருவருக்கும் கடும் போட்டி இருக்கும். 
 
ஆனால், பிந்து தற்போது தான் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். அதனால், வெளி உலகம் தெரிந்து அவர் நடந்துக்கொள்வார், அந்த ஒரு விஷயத்தில் ஓவியாவை பிந்து வீழ்த்த வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்