அஜித் விலகியதும், காய் நகர்த்தும் தனுஷ்: விஐபி 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (19:17 IST)
ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸில் இருந்து விவேகம் பின்வாங்கியிருப்பதால், தைரியமாக தனது படத்தின் வெளியீட்டு தேதியை வெளியிட்டுள்ளார் தனுஷ்.


 
 
செளந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் வேலையில்லா பட்டதாரி 2. அமலா பால் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகை கஜோல் நடித்துள்ளார். 
 
இந்தப் படம், கடந்த மாதம் 28 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாளன்று வெளியாவதாக இருந்தது. ஆனால், சென்சார் செய்யத் தாமதம் ஏற்பட்டதால் குறித்த நாளில் படத்தை வெளியிடமுடியவில்லை.
 
தற்போது படம் வரும் 11 ஆம் தேதி வெளியாகும் என தனுஷ் அறிவித்துள்ளார். அஜித் படம் 10 ஆம் தேதி வெளியாகி இருந்தால் விஜபி 2 படத்தை விட பெரும்பாலானோர் அஜித் படத்திற்கே முக்கியதுவம் அளித்திருப்பர். ஆனால், இப்பொழுது எந்த பிரச்சனை மற்றும் போட்டிகளுமின்றி படத்தை வெளியிடுகிறார் தனுஷ்.
 
அடுத்த கட்டுரையில்