விக்ரம் - கார்த்திக் சுப்புராஜ் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (18:53 IST)
விக்ரம் - கார்த்திக் சுப்புராஜ் படத்தின் டைட்டில் அறிவிப்பு!
பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தில் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த படத்திற்கு மகான் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் உறுதி செய்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். விக்ரம் ஜோடியாக சிம்ரன் நடிக்கும் இந்த படத்தில் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்துள்ளனர் 
 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் இந்தப் படத்தின் வீடியோ ஒன்று இன்று வெளியாகியுள்ள நிலையில் அதில் விக்ரம் அட்டகாசமான கெட்டப்பில் இருக்கிறார் என்பதும் இந்த டைட்டிலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்