சீயான் 60 படப்பிடிப்புத் தளத்தில் வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம்!

வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (10:04 IST)
விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்து வந்த சியான் 60 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இப்போது முடிந்துள்ளது.

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்து வந்த சியான் 60 என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சியான் 60 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விக்ரம் ரசிகர்கள் குஷியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் விக்ரம் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் விக்ரம் ஒரு அகோரி போன்ற கெட்டப்பில் இருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்