4 வாரங்கள் கபடி பயிற்சி பெறும் நடிகர் துருவ் விக்ரம்!

வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (22:25 IST)
பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் 4 வாரங்கள் கபடி பயிற்சி பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது
 
இந்த படத்தில் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது இதற்காக அவர் தூத்துக்குடியில் இருந்து வரவழைக்கப்பட்ட கபடி வீரர்களிடம் பயிற்சி பெற்று வருவதாகவும் இந்த பயிற்சியை 4 வாரங்கள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த படம் கபடி வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்றும் இந்த படத்தில் கபடி காட்சிகள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக துருவ் விக்ரம் கபடி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் உண்மையான கபடி வீரர்கள் சிலர் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்