இயக்குனர் .மணிரத்னம் மீது அதிருப்தியில் விக்ரம் !

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (19:46 IST)
எழுத்துப் பிரம்மா என அழைக்கப்படும்  சுஜாதா கடந்த 2004 ஆம் ஆண்டு கூறியபடி, இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், ஜெயரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள  பொன்னியின் செல்வன் படம்  வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்தில் வெளியான  இந்த படத்தின் டீசர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 ஒரு நிமிடம் 20 வினாடிகள் உள்ள இந்த டீசரில் பிரம்மாண்டமான காட்சிகளை பார்த்து கோலிவுட் பட உலகினர் மற்றும் ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரமுக்கு குறைந்த அளவிலான சீன்கள் மட்டுமே இருப்பதாகவும், இதனால் அவர்  மணிரத்னம் மீது அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், முதலில் கதையைக் கேட்ட பின் தான் விக்ரம் இப்படத்தில்  நடித்திருப்பார். அதனால், மணிரத்னத்தின் மீது விக்ரம் மனஸ்தாப்பட வேண்டியதிருக்காது என்றும் பொன்னியின் செல்வன் படத்தின் டீசரில் விக்ரம் போர்சன் அதிகமாக இருப்பதுபோன்றுள்ளதாக கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்