விரைவில் துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர்… லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
வியாழன், 17 ஆகஸ்ட் 2023 (09:15 IST)
கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக  2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. இதனால் கௌதம் மேனனுக்கும் விக்ரம்முக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின.

இப்போது மீண்டும் சில காட்சிகளை படமாக்கி படத்தை முடித்துள்ளதாக தெரிகிறது. அதையடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்து ரிலீஸூக்காக இப்போது காத்திருக்கிறது.

இந்நிலையில் படத்தின் டிரைலர் சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து விரைவில் டிரைலர் ரிலீஸ் அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்