ரசிககளை எச்சரித்த விஜய்… பின்னணி என்ன?

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (09:26 IST)
நடிகர் விஜய் தனது ரசிகர்களை எச்சரிக்கும் விதமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய்யின் ரசிகர்கள் மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகின்றனர். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட கணிசமானோர் வெற்றியும் பெற்றுள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது தெரிவித்துள்ளதாக மக்கள் இயக்கத்தின் நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த அறிக்கையில் ‘அரசியல் தலைவர்களை, அரசுப் பதவிகளில் உள்ளவர்களை யாரையும் எக்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிக்கைகள், இணையதளங்கள் மற்றும் மீம்ஸ் வடிவில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது. இது தொடர்பாக விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு விஜய் ஏற்கனவே அறிவுறுத்தியிருக்கிறார். அவ்வாறு செயல்பட்டவர்களை இயக்கத்தை விட்டு நீக்கியும் உள்ளோம். இனிவரும் காலங்களில் அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்’ எனக் கூறியுள்ளார். இந்த அறிக்கை இப்போது இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்