ஆந்திராவில் வாரிசு ரிலீஸூக்கு மேலும் ஒரு சிக்கல்… களமிறங்கிய பாலையா!

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (14:59 IST)
வாரிசு திரைப்படம் தெலுங்கில் வார்சாடு என்ற பெயரிலும் உருவாகி வருகிறது.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் வார்சாடு என்ற பெயரில் உருவாகி வரும் இந்த திரைப்படம் தமிழில் ரிலீஸ் ஆகும் அதே நாளில் தெலுங்கிலும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்துக்கு போட்டியாக பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இப்போது பாலகிருஷ்னாவின் வீரசிம்மா ரெட்டி திரைப்படமும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாஸ் நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவதால் வாரிசு படத்துக்கு திரையரங்குகள் போதுமான அளவுக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்