சின்னக் கல்லு பெத்த லாபம் – மணிகண்டன் வெப் சீரிஸில் விஜய் சேதுபதிக்கு இவ்வளவு சம்பளமா?

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (07:50 IST)
இயக்குனர் மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை மற்றும் குற்றமே தண்டனை ஆகிய படங்கள் மிகப்பெரிய அங்கிகாரத்தை அவருக்கு பெற்றுத் தந்தன. ஆண்டவன் கட்டளை படத்துக்குப் பிறகு 3 ஆண்டு இடைவெளியில் கடைசி விவசாயி படத்தை இயக்கி இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட்டார். அந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்தது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக இருவரும் ஒரு படைப்புக்காக இணைந்துள்ளனர்.  ஆனால் இந்த முறை ஒரு படத்துக்காக அல்ல, வெப் சீரிஸ்க்காக. தமிழில் விஜய் சேதுபதி நடிக்கும் முதல் வெப் தொடராக உருவாகி வருகிறது. இந்த தொடருக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைக்கிறார்.

இப்போது ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் இந்த வெப் சீரிஸ்க்காக விஜய் சேதுபதி 20 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளாராம். வழக்கமாக கொடுக்கும் தேதிகளை விட குறைவாகவே இந்த வெப் சீரிஸுக்கு கொடுத்திருந்தாலும், அவர் வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட அதிக தொகையை இதற்காக அவர் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்