விஜய்சேதுபதி பட இயக்குநர் மருத்துவமனையில் அனுமதி

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (23:55 IST)
இயற்கை பேராண்மை, புறம்போக்கு போன்ற படங்களை இயக்கியவர் எஸ்.பி. ஜனநாதன். இவருக்குத் தற்போது திடீரென்று  உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில்  உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இவர் தற்போது, விஜய்சேதுபதி – ஸ்ருதிஹாசன் நடிப்பில் லாபம் என்ற படத்தை இயக்கிவருகிறார்.

ஏற்கனவே இப்படத்தின் டீசர், டிரைலர் ரிலீசாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் எஸ்.பி,ஜன்நாதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சினிமாவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்