இன்னும் சற்றுநேரத்தில் வெளியாகிறது ஆர்யாவின் ‘டெடி’

வியாழன், 11 மார்ச் 2021 (22:24 IST)
ஆர்யா சாயிஷா நடித்த ‘டெடி’என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பே தயார் ஆனது
 
இந்த நிலையில் இந்த திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு இந்தப் படம் வெளியாக உள்ளது இதனை அடுத்து ஆர்யாவின் ரசிகர்கள் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
 
ஆர்யா சாயிஷா மகிழ்திருமேனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசை அமைத்துள்ளார். சக்தி சிதம்பரம் இயக்கியுள்ள இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லர் வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்