தலைவர் 171 படத்தின் கதையைக் கேட்டு விஜய் சொன்னது என்ன?- லோகேஷ் பகிர்ந்த தகவல்!

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (14:00 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த படம் பற்றி சமீபத்தில் பேசியுள்ள இயக்குனர் லோகேஷ் “இந்த கதையை நான் மாநகரம் படத்துக்கு முன்பாக எழுதினேன். ஆனால் அப்போது ரஜினி சாரை மனதில் வைத்தெல்லாம் எழுதவில்லை. அப்போது அந்த கற்பனை கூட எனக்கில்லை” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது படம் பற்றி மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவலை அவர் பகிர்ந்துள்ளார். அதில் “இந்த படத்தின் கதையை விஜய் அண்ணாவிடம் சொன்னேன். அவர் கதையைக் கேட்டுவிட்டு ‘இதுவரை எந்த படத்தின் கதையையும் 10 நிமிடம் கேட்டுவிட்டு நான் நல்லா இருக்குன்னு சொன்னதேயில்ல. இது பயங்கரமா இருக்கே’ எனக் கூறினார்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்