இதான் தளபதி 67 படத்துல விஜய் லுக்கா?.... சமீபத்தில் வெளியான புகைப்படம்!

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (14:53 IST)
விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் தளபதி 67 பட ஷூட்டிங் நடந்து வருகிறது.

சமீபகாலமாக விஜய்யின் தலைமுடித் தோற்றம் ரசிகர்கள் இடையே கூடுதல் கவனத்தைப் பெற்று வருகிறது. ஒவ்வொரு படத்துக்கும் வெவ்வேறு விதமான விக்குகளை அவர் பயன்படுத்தி வருகிறார். இது சம்மந்தமாக ட்ரோல்களும் இணையத்தில் வெளியாகின.

தனியார் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும்  பல வெற்றி  நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகப் பணியாற்றியவரான  விஜே ரம்யா  நடிகர் விஜய்யை  சமீபத்தில் சந்தித்து தான் எழுதிய புத்தகத்தை பரிசாக அளித்தார். இது சம்மந்தமான புகைப்படத்தில் விஜய்யின் சிகையலங்காரம் வித்தியாசமாக இருந்தது.

இதையொட்டி இந்த கெட்டப்பில்தான் விஜய் லோகேஷ் படத்தில் நடிக்கப் போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்