தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று கடந்த சில மாதங்களாகவே வதந்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் அவ்வப்போது படக்குழுவினர்களும் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் அக்டோபர் 1 முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்றும் அதன் பின்னர் ’மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் மத்திய அரசு அக்டோபர் ஒன்றாம் தேதி திரையரங்குகள் திறப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று கூறிவிட்டது
மேலும் அப்படியே ஒரு வேளை திரையரங்குகள் திறந்தாலும் தற்போது தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நடந்துவரும் பனிப்போர் காரணமாக திரையரங்குகளில் புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படுமா என்ற சந்தேகம் உள்ளது
இந்த நிலையில் தான் ’மாஸ்டர்’ திரைப்படம் மீண்டும் ஓடிடியில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக வதந்திகள் பரவி உள்ளது. ஆனால் இந்த முறை வதந்தி, உண்மையாகிவிடும்போல் தெரிகிறது. இது குறித்து திரையுலக வட்டாரத்தில் விசாரித்தபோது ’மாஸ்டர்’ திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவது உண்மைதான் என்றும் படக்குழுவினர் எதிர்பார்க்கும் தொகை கிடைத்தால் நிச்சயம் ’மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளிவந்து விடும் என்றும் கூறப்படுகிறது
’மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வருமா? அல்லது பொறுமை காத்து திரையரங்குகளில் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்