விஜய் சேதுபதியின் மற்றொரு படமும் ஓடிடி ரிலீஸ்!

திங்கள், 14 செப்டம்பர் 2020 (11:50 IST)
விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படமும் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனுராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து மாமனிதன் படம் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே முடிந்தது. அதன் பின்னர் எல்லா பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாரான நேரத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஓடிடியில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் இயக்குனரோடு ஏற்கனவே மோதல் போக்கால் படத்தைக் கண்டுகொள்ளாமல் விட்ட யுவன் இப்போதாவது ரிலிஸுக்கான வேலைகளை செய்து வருவது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்