வாரிசு படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பற்றி வெளியான தகவல்!

Webdunia
வியாழன், 21 ஜூலை 2022 (08:55 IST)
விஜய் தற்போது வம்சி இயக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றன. படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் எஸ் ஜே சூர்யா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் இப்போது படத்தில் விஜய் நடிக்கும் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் அப் டெவலப்பராக விஜய் ராஜேந்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்