அர்ஜுன் இயக்கத்தில் உருவாகும் சீதா பயணம் டீசர் வெளியீடு… எப்படி இருக்கு?

vinoth

வியாழன், 12 ஜூன் 2025 (10:08 IST)
நடிகர் அர்ஜுன் தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் மிக முக்கியமான நடிகராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் சில படங்களை இயக்கியும் உள்ளார். இந்நிலையில் தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவை தெலுங்கில் அறிமுகப்படுத்த ’சீதா பயணம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ஆனால் அந்த படத்தின் கதாநாயகனுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படம் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் இப்போது அதே படத்தை உபேந்திராவின் அண்ணன் மகன் நிரஞ்சனைக் கதாநாயகனாக்கி இயக்குகிறார். இந்த படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் பிரகாஷ் ராஜ் மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஷூட்டிங் முடிந்து தற்போது ரிலீஸ் பணிகள் நடந்து வரும் நிலையில் படத்தின் டீசர் ரிலீஸாகியுள்ளது. டீசர் நாயக, நாயகியருக்கு இடையேயான ரொமான்ஸ் டிராமாவாக ஆரம்பித்து, பின்னர் குடும்பக் கதையாக மாறுகிறது. இறுதியில் அர்ஜுனின் ஆக்‌ஷன் கேமியோவோடு நிறைவுறுகிறது. மொத்தத்தில் படத்தில் என்ன இருக்கும் என்பதை யூகிக்கவோ, அல்லது எதிர்பார்ப்பையோ ஏற்படுத்தாத ஒரு டீசராக அமைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்