இந்த படத்துக்கான திரைக்கதை வேலைகளை இயக்குனர் லோகேஷ் தன் குழுவோடு தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட படப்பிடிப்பு டிசம்பருக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகை குறைவைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தளபதி 67 படத்தை முடித்ததும் லோகேஷ் கைதி 2, சூர்யாவோடு இரும்புக்கை மாயாவி, ரஜினி படம் ஆகியவற்றில் ஒன்றை இயக்குவார் என சொல்லப்பட்டு வருகிறதி. ஆனால் இப்போது அவர் பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் உருவாகும் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.