டிசம்பரைக் குறிவைக்கும் விஜய்

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2017 (12:01 IST)
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாதுரை’ படம், டிசம்பரில் ரிலீஸாகலாம் எனத் தெரிகிறது.


 

அறிமுக இயக்குநரான சீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘அண்ணாதுரை’. விஜய் ஆண்டனி இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்த த்ரில்லர் படம், தெலுங்கில் ‘இந்திரசேனா’ என்ற பெயரில் வெளியாகிறது. மகிமா, ஜுவல் மேரி, டயானா, ராதாரவி மற்றும் காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை, டிசம்பர் மாதம் வெளியிட முயற்சி செய்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படம் டிசம்பர் 22ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. எனவே, டிசம்பர் முதல் வாரத்தில் இந்தப் படம் ரிலீஸாவதற்கான வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்