தியேட்டரில் முழுமையாக இல்லாத கனிமா பாடல்… கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த மற்றொரு வெர்ஷன்!

vinoth

திங்கள், 5 மே 2025 (14:55 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான ‘ரெட்ரோ’ திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இருந்தும் படத்துக்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது. படம் இதுவரை இந்தியாவில் மட்டும் 43 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

படத்தில் இருக்கும் குறைகள் பெரிதாக்கப்பட்டு ஆன்லைனில் இந்தப் படத்தைத் தாக்கும் விமர்சனங்கள் மற்றும் மீம்களும் அதிகளவில் பரவி வருகின்றன. இதுபற்றி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ‘இந்தப் படத்தின் மூலம் ஆன்லைன் விமர்சனங்களைப் பார்க்கக் கூடாது என்பதைக் கற்றுக் கொண்டுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

படம் பார்த்த ரசிகர்கள் பலரும் சொன்னது தாங்கள் எதிர்பார்த்து வந்த ‘கனிமா’ பாடல் படத்தில் முழுமையாக இல்லை என்பதுதான். ஒரே ஷாட்டில் எடுத்ததால் அந்த பாடலுக்கு இடையே வசனம் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றன. இதைப் பலரும் பகிர்ந்து வந்த நிலையில் தற்போது ‘கனிமா’ பாடலுக்காக சந்தோஷ் நாராயணன் உருவாக்கிய மற்றொரு வெர்ஷனை கார்த்திக் சுப்பராஜ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Here is the #Kanimaa Alternate Version. A Small peek into @Music_Santhosh 's #KanimaaAlt Version ????#Retro#LoveLaughterWar #RetroBlockbuster #TheOneWon pic.twitter.com/xI91CdNNNT

— karthik subbaraj (@karthiksubbaraj) May 4, 2025

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்