இந்தப் படத்தில், எடிட்டராகவும் பணியாற்றியுள்ளார் விஜய் ஆண்டனி. “எடிட்டிங் குறித்த அறிவு ஏற்கெனவே எனக்கு இருக்கிறது. எடிட்டராகப் பணியாற்றியது சந்தோஷத்தை அளிக்கிறது. எப்படி சில வருடங்களுக்கு முன்பு நடிகனாக தைரியமாகக் களமிறங்கினேனோ, அதேபோல் தான் எடிட்டராகவும் களமிறங்கினேன். படம் நன்றாக வெளிவந்திருப்பதில் மகிழ்ச்சி” என்கிறார் விஜய் ஆண்டனி. நவம்பரில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.