விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்.. தெரியாமல் நடந்துவிட்டதாக பதிவு..!

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2023 (18:57 IST)
இயக்குனர்  விக்னேஷ் சிவன் தெரியாமல் நடந்து விட்டதாக விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.  
 
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இடையே மனக்கசப்பு இருந்ததாக கூறப்பட்ட வீடியோ ஒன்றை விக்னேஷ் சிவன் லைக் செய்த நிலையில் தற்போது அதற்காக அவர் மன்னிப்பு கேட்டு உள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது
 
விஜய், லோகேஷ் கனகராஜ் ரசிகர்களே... குழப்பத்துக்கு மன்னிக்கவும். அந்த வீடியோவில் என்ன பேசப்பட்டிருக்கிறது என்பதை பார்க்காமல், லோகேஷ் கனகராஜின் நேர்காணல் என்பதால் அந்த வீடியோவை லைக் செய்தேன். நான் லோகேஷ் படங்களின் மிகப்பெரிய ரசிகன் என்பதால் அதை செய்தேன்.
 
அந்த நேர்காணலில் இருந்த லோகேஷ் கனகராஜின் படத்தை பார்த்து  உடனே உணர்ச்சிவசப்பட்டு லைக் செய்துவிட்டேன். அது என்னுடைய மோசமான நேரம் என்று நினைக்கின்றேன். அந்த வீடியோவில் என்ன பேசப்பட்டுள்ளது என்பதை நான் பார்க்கவில்லை. ட்விட்டரில் இருந்த கருத்தையும் படிக்கவில்லை. நான் கொஞ்சம் கவனமுடன் இருந்திருக்கலாம். 
 
இது என்னுடைய தரப்பில் நடந்த ஒரு தவறு. உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்களிடம் இதற்காக  மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அக்டோபர் 19-ஆம் தேதி ’லியோ’ படத்தை பார்க்க நானும் ஆவலுடன் இருக்கிறேன்.  விஜய்யின் ‘லியோ’ படத்தின் மிகப்பெரிய ரிலீஸ்க்காக தான் காத்துக் கொண்டிருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்