கடந்த சில மாதங்களாக விஜய், தமிழக அரசியலில் கூர்ந்து கவனித்து வருகிறார் என்பதும் தமிழகத்தில் உள்ள அரசியல் பிரபலங்களின் சிலைகளுக்கு தனது விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் மாலை மரியாதை செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இதுவரை எந்த அரசியல் தலைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்து கூறாத விஜய் முதல் முறையாக பாமக தலைவர் அன்புமணிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருப்பதை பார்க்கும்போது அந்த அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஜய்யின் திட்டம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்