பாராட்டை விட அவமானம் நிறையக் கற்றுக்கொடுக்கிறது… ஃபீல் பண்ணும் விக்னேஷ் சிவன்!

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (08:07 IST)
அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க,விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கடந்த ஆண்டே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நீண்ட படத்துக்காக விக்னேஷ் சிவன் உருவாக்கிய திரைக்கதை லைகா மற்றும் அஜித் தரப்புக்கு பிடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதனால் அந்த படத்தில் இருந்து அவரை நீக்கி மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் அடுத்து ப்ரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ”என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி!.. வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது, பாராட்டும், வெற்றியும் நமக்குக் கற்பிப்பதை விட, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது” எனக் கூறியுள்ள அவர், தன்னுடைய அடுத்த படத்துக்கு தயார் ஆகி வருவதாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்