ஒபன் ஆனதுமே விற்று தீரும் ‘விடாமுயற்சி’ டிக்கெட்டுகள்! திருவிழாவுக்கு தயாராகும் ரசிகர்கள்!

Prasanth Karthick
திங்கள், 3 பிப்ரவரி 2025 (16:39 IST)

அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் 6ம் தேதி வெளியாகும் நிலையில் டிக்கெட்டுகள் வேகவேகமாக விற்று தீர்ந்து வருகின்றன.

 

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்து தயாராகியுள்ள படம் விடாமுயற்சி. இந்த படத்தில் அர்ஜூன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா என பலர் நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த இந்த படம் எதிர்பாராத காரணங்களால் பிப்ரவரி 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது படத்தின் டிக்கெட் முன்பதிவு பல தியேட்டர்களிலும் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது.

 

இன்று திருச்சி, தஞ்சை ஏரியாக்களில் உள்ள தியேட்டர்களில் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் வேகமாக விற்று தீர்ந்துள்ளன. புக் மை ஷோ இணையதளம் மூலமாக கடந்த சில மணி நேரங்களுக்குள் 2 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படம் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் விடாமுயற்சியை காண ரசிகர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். ரிலீஸை கொண்டாடும் விதமாக பல பகுதிகளிலும் ரசிகர்கள் பேனர்கள், கட் அவுட்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்