அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் மேக்கிங் வீடியோ சற்றுமுன் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது படக்குழுவினர்களுக்கு ஏற்பட்ட சவால்கள் குறித்த காட்சிகள் இருப்பதை எடுத்து, இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
விடாமுயற்சி படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கடுமையான பனி, பொருட்களை எடுத்துக்கொண்டு மலையேறும் காட்சிகள், படப்பிடிப்பின் போது அஜித்துக்கு ஏற்பட்ட கார் விபத்து, கார் விபத்தால் அவருக்கு ஏற்பட்ட காயம், காயத்தோடு அவர் நடித்துக் கொடுத்த காட்சிகள் ஆகியவை இந்த 163 வினாடிகள் கொண்ட வீடியோவில் உள்ளன.
தமிழகத்தில் மட்டும் இந்த படம் 1000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும், உலகம் முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படத்தின் முன்பதிவுகளும் தொடங்கி விட்டதை அடுத்து, ஒரு சில நிமிடங்களில் முதல் நாள் காட்சிக்கான முன்பதிவு முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.