அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் பத்திக்கிச்சு பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வைப் ஏற்படுத்தி வருகிறது.
மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் விடாமுயற்சி. இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் சாவடிக்கா பாடல் ஏற்கனவே வெளியாகி ட்ரெண்ட் ஆகிய நிலையில், சமீபத்தில் படத்தின் ட்ரெய்லரும், ரிலீஸ் தேதியும் வெளியானது.
பிப்ரவரி 6ம் தேதி படம் வெளியாக உள்ளதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ள நிலையில் மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக தற்போது விடாமுயற்சி படத்தின் பத்திக்கிச்சு பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் உலகம் உன்னை எதிர்க்கும்போது உன்னை நீயே நம்பு போதும். நம்பிக்கை விடாமுயற்சி என்ற வரிகள் தற்போது வைப் மெட்டீரியலாகி உள்ளன. தற்பொது இந்த மியூசிக் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.
Edit by Prasanth.K