இந்த நிலையில் சற்றுமுன் அவர் நடிக்க இருக்கும் 51 வது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது/ ஏற்கனவே இவர் ஓ மை கடவுளே டிராகன் ஆகிய படங்களை இயக்கிய நிலையில் இந்த படம் அவருக்கு மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த அறிவிப்பில் காதல் இருக்கும் பயத்தினால் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை, மீறி அவன் பூமிக்கு வந்தால்? என்ற கேள்வி குறியுடன் சிம்பு அட்டகாசமாக இருக்கும் போஸ்டர் வெளியாகி உள்ளது என்பதும் இந்த போஸ்டரில் God Of Love என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.