மீண்டும் விடாமுயற்சி ஷூட்டிங்குக்கு ஏற்பட்ட சிக்கல்.. சென்னை கிளம்ப தயாராகும் படக்குழு!

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2023 (07:10 IST)
அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் தற்போது நடந்து வருகிறது.  அஜித், திரிஷா உள்ளிட்டவர்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளனர். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் சமீபத்தில்தான் ஷூட்டிங் தொடங்கியது.

விடாமுயற்சி படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமையை மட்டும் சுமார் 250 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது படத்தின் பட்ஜெட்டில் சுமார் 70 சதவீதம் அளவுக்கு என சொல்லப்படுகிறது. இதனால் இந்த படம் அஜித் சினிமா வாழ்க்கையில் மிக அதிக தொகைக்கு வியாபாரம் செய்யப்பட்ட படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அங்கு விறுவிறுப்பாக நடந்து வரும் ஷூட்டிங்குக்கு இப்போது ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு மோசமான மணல் சூறாவளி ஏற்பட உள்ளதால் விடாமுயற்சி படக்குழு விரைவில் சென்னைக்கு திரும்ப உள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்