மன்மத லீலை படத்துக்குப் பிறகு வெங்கட்பிரபுவின் அடுத்த படம்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (10:02 IST)
இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது மாநாடு.

இதனால் வெங்கட்பிரபு இப்போது இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியுள்ளார். இதையடுத்து மாநாடு படத்தின் தாமதத்தால் ஏற்கனவே அசோக் செல்வனை வைத்து அவர் மன்மத லீலை என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். இந்த படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் மாநாடு வெற்றிக்குப் பிறகு பல மொழிகளில் கவனம் பெற்றுள்ள அவர் தன்னுடைய அடுத்த படம் பற்றி பேசியுள்ளார்.

சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் ‘என்னுடைய அடுத்த ஒரு தெலுங்குப் படமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது’ எனக் கூறியுள்ளார். அதையடுத்து இப்போது நாக சைதன்யா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தை அவர் இயக்க உள்ளதாக அதிகாரப்பூரவ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை சீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. தயாரிப்பாளர் மற்றும் நாக சைதன்யா ஆகியோரோடு வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்