ஷாலினி அஜித் நடிப்பாரா ? .... இயக்குநர் வெங்கட்பிரபு பதில்!

திங்கள், 4 ஏப்ரல் 2022 (21:52 IST)
நடிகர் அஜித்தின் மனைவி நடிப்பது குறித்த கேள்விக்கு இயக்குநர் வெங்கட் பிரபு பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகர்  அஜித்குமார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வலிமை. இப்படத்திற்குப் பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.

 இந்நிலையில்  நடிகர் அஜித் நடிப்பில் மங்கத்தா என்ற படத்தை இயக்கிய          வெங்கட்பிரபுவிடம் அஜித்தின் மனைவி ஷாலினி மீண்டும் நடிப்பாரா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு வெங்கட்பிரபு என் குடும்பத்தில்  இன்னொரு ஆளையும் நடிக்க வைக்க முயற்சிக்கிறீர்களா எனக் கேட்டு என்னை அடிப்பாரே எனப் பதில் அளித்தார்.

மேலும், ஷாலினி குடும்பத்தை கவனிப்பதில் கவனம் செலுத்தி வருவதால் அவர் நடிக்க மாட்டடார் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்