விஜய் ரசிகர்களை ஏமாற்றிய வெங்கட்பிரபு…!

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (07:25 IST)
விஜய் 68 படத்தின் இயக்குனராக வெங்கட் பிரபு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதையடுத்து அவர் மீது இப்போது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் கவனமும் குவிய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தன்னுடைய அனைத்து படங்களையும் குறிப்பிட்டு அடுத்தது என்ன என்று கேட்டு ஒரு ட்வீட்டைப் பகிர்ந்திருந்தார்.

இதனால் அடுத்து அவர் இயக்க உள்ள விஜய் 68 படத்தின் அப்டேட்டைதான் வெளியிட போகிறார் என அனைவரும் ஆவலோடு காத்திருந்தனர். ஆனால் அவரோ மீசைய முறுக்கு படத்தில் நடித்த ஆனந்த் எழுதி இயக்கி தயாரிக்கும் படமான ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்தின் அப்டேட் வீடியோவை வெளியிட்டு விஜய் ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்கு ஆளாக்கியுள்ளார்.

இதையடுத்து ரசிகர்கள் அவரிடம் விஜய் 68 படத்தின் அப்டேட்டைக் கேட்க “தளபதி 68 அப்டேட் சும்மா தெறிக்கும். காத்திருங்கள்” என ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்