ஜெயிலர் மல்டிஸ்டார் படம் இல்லை… அவங்கள்லாம் சிறப்புத் தோற்றம்தானாம் – லேட்டஸ்ட் தகவல்!

ஞாயிறு, 30 ஜூலை 2023 (11:18 IST)
கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த நெல்சன் மூன்றாவது படத்திலேயே விஜய்யை  பீஸ்ட் படத்தில் இயக்கும் வாய்ப்பை பெற்றார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான அந்த படம் மோசமான விமர்சங்களைப் பெற்றது. வசூலும் பெரியளவில் இல்லை. இந்த படத்தின் தோல்வியால் நெல்சன் சமூகவலைதளங்களில் கொடூரமாக ட்ரோல் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது அவர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் மோகன் லால், சிவராஜ் குமார் மற்றும் ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோர் நடித்திருக்கும் நிலையில் ஜெயிலர் படம் ஒரு மல்டி ஸ்டார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுபற்றி பேசியுள்ள நெல்சன் “அவர்கள் எல்லாம் சிறப்புத் தோற்றத்தில்தான் நடித்துள்ளார்கள். இது மல்டி ஸ்டார் படம் இல்லை” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்