ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதல் பாடல்! – வெந்து தணிந்தது காடு அப்டேட்!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (12:20 IST)
சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் இசை வீடியோ இன்று வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாநாடு வெற்றியை தொடர்ந்து சிம்பு நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தை கௌதம் மேனன் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து சிம்பு – கௌதம் மேனன் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணில் வரும் மூன்றாவது படம் இது.

இந்த படத்தின் போஸ்டர் முன்னதாக வெளியாகி பெரும் வைரலானது. அதில் சிம்பு உடலை மிகவும் குறைந்து மெலிந்தவராக காணப்பட்டது பல்வேறு விவாதங்களை எழுப்பியது. இந்நிலையில் இன்று வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் இசை வீடியோ வெளியாக உள்ளது. ”க்ளிம்ப்ஸ் ஆப் முத்து” என்ற அந்த இசை இன்று மதியம் 1.26க்கு வெளியாக உள்ளதாக கௌதம் மேனன் அறிவித்துள்ளார். இதனால் சிம்புவிற்கு இந்த படத்தில் முத்து என பெயரிடப்பட்டுள்ளதாக ரசிகர்களிடையே பேச்சு நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்