ரயிலில் ஒட்டப்பட்ட வாரிசு ப்ரோமோ போஸ்டர் கிழிப்பு! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Webdunia
வியாழன், 29 டிசம்பர் 2022 (12:26 IST)
விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் ப்ரோமோஷனுக்காக ரயிலில் ஒட்டப்பட்ட பிரம்மாண்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் நடித்து வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாரிசு. ராஷ்மிகா மந்தனா, ஷ்யாம், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். தெலுங்கு, தமிழ் மொழிகளில் இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட தில் ராஜூ திட்டமிட்டுள்ள நிலையில் படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் ஆரம்பம் முதலே சிக்கல் நிலவி வந்தது.

பின்னர் இந்த படத்தை தமிழகத்தில் சில பகுதிகளில் ரெட்ஜெயண்ட் மூவிஸ், மற்ற இடங்களில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ வெளியிடுகின்றனர். இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் இப்போதே தொடங்கி உள்ள நிலையில் சென்னையிலிருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வாரிசு படத்தின் ப்ரோமோஷனுக்காக ப்ரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதை விஜய் ரசிகர்களும் ஷேர் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் அனந்தபுரி ரயில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வாரிசு படக்குழு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்