அடுத்தடுத்த நாட்களில் ‘துணிவு’ ‘வாரிசு’ டிரைலர்: செம போட்டி

திங்கள், 26 டிசம்பர் 2022 (20:19 IST)
அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படங்களின் புரமோஷன் போட்டி போட்டுக்கொண்டு நடத்தப்பட்டு வருகின்றன. 
 
இந்த நிலையில் தற்போது துணிவு மற்றும் வாரிசு படங்களின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளது.
 
அஜித் நடித்த துணிவு படத்தின் டிரைலர் டிசம்பர் 31ம் தேதியும் விஜய் நடித்த வாரிசு படத்தின் டிரைலர் ஜனவரி 1ஆம் தேதியும் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன
 
அடுத்தடுத்த நாட்களில் அஜித் விஜய் படங்களின் டிரைலர் வெளியாக உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்