நாற்காலிகளை சேதப்படுத்திய விஜய் ரசிகர்கள்… வாரிசு படக்குழுவுக்கு அபராதம்!

திங்கள், 26 டிசம்பர் 2022 (08:40 IST)
சமீபத்தில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு பட இசை வெளியீட்டு விழா நடந்தது.

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவை காண விஜய் ரசிகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. கிட்டத்தட்ட 5000 ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் விழாவைக் கண்டு களித்தனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அரங்கத்தின் இருக்கைகள் அதிகளவில் சேதாரம் அடைந்துள்ளதாகவும், சேதார மதிப்பு கணக்கிடப்பட்டு அது சம்மந்தமாக வாரிசு படக்குழுவுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அரங்க பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நிகழ்ச்சிக்கான டிக்கெட் இல்லாத ரசிகர்களும் நேரு மைதானத்தில் குழுமினர். இதனால் கூட்டம் அதிகமாக, போலீஸார் டிக்கெட் இல்லாத ரசிகர்களை அடித்து துரத்திய வீடியோ வைரல் ஆனது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்