'புஷ்பா 2’ படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவு நீளமா? ‘இந்தியன் 2’ பார்த்தும் திருந்தலையா?

Mahendran

வியாழன், 28 நவம்பர் 2024 (17:53 IST)
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் சான்றிதழ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ரன்னிங் டைமை பார்த்த ரசிகர்கள், "இவ்வளவு நீளமான படமா?" என ஆச்சரிய கேள்வி எழுப்பியுள்ளதோடு, "இந்தியன் 2 படம் பார்த்தும் திருந்தவில்லையா?" என கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் மாதம் வெளியாகிறது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் கூட சென்னையில் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இந்த நிலையில், இந்த படத்தின் ரன்னிங் டைம் 200 நிமிடங்கள், அதாவது 3 மணி நேரம் 20 நிமிடங்கள் என்று கூறப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது. 
 
3 மணி நேரம் உள்ள படமே ரசிகர்கள் பார்க்க பொறுமை இன்றி உள்ளனர் என்பதும் குறிப்பாக, இந்தியன் 2 படம் ரிலீசுக்கு பிறகு ஏற்பட்ட மோசமான விமர்சனம் காரணமாக, ரன்னிங் டைம் குறைக்கப்பட்டது என்பது தெரிந்தது. ஆனால், இந்தியன் 2 படத்தை பார்த்தும் திருந்தாத புஷ்பா 2 குழுவினர், 3 மணி நேரம் 20 நிமிடங்கள் என ரன்னிங் டைமை வைத்துள்ளது. இது நிச்சயம் அந்த படத்திற்கு பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு வருவது பரபரப்பை உருவாக்கியுள்ளது.
 
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்