என்னை தெலுங்கு இயக்குனராக பார்க்கவேண்டாம்… இயக்குனர் வம்சி வேண்டுகோள்!

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (14:18 IST)
இயக்குனர் வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களோடு ஓடி வருகிறது.

ஜனவரி 11 ஆம் தேதி தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆன வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதையடுத்து தற்போது தெலுங்கிலும் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஓடிவரும் வாரிசு திரைப்படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியுள்ளனர்.

அதில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் வம்சி “தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை தெலுங்கு இயக்குனராக நினைக்க வேண்டாம். நான் எல்லைகளை தாண்ட விரும்பும் ஒரு சாதாரண மனிதனாகவே என்னை நினைக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்