In LOVE again... உமா ரியாஸுடனான சீக்ரெட்டை உடைத்த வனிதா!!

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (10:26 IST)
வனிதா மீண்டும் காதல் என பதிவிட்டதற்கான உண்மையான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. 
 
தமிழ் சினிமா நடிகையும் பிக்பாஸ் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை 3 வதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது பீட்டர் பாலை பிரிந்த சில மாதங்களிலே வனிதா அடுத்த காதலில் விழுந்துள்ளார். 
 
ஆம் இதுகுறித்து அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’மீண்டும் காதல், இப்போது சந்தோஷமா? என பதிவிட்டு அந்த பதிவில் உமா ரியாஸை டேக் செய்துள்ளார். பெரும் சர்ச்சைக்குள்ளாகும் இந்த பதிவில் அவர் கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்தும் இருந்தார். 
 
இந்நிலையில் இந்த பதிவிற்கான உண்மையான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது, நடிகை உமா ரியாஸ் நடத்தி வரும் யூடியூப் சேனலில் நடிகை வனிதா கலந்து கொண்டு அப்போது உமா ரியாஸின், சவாலை ஏற்றுக் கொண்டதன் காரணமாக தான் இந்த பதிவை வனிதா போட்டுள்ளார். மற்ற படி வனிதாவிற்கு காதல் ஏதுமில்லையாம்... 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்