3 ஆண்களுடன் காதல், அரசியல் புள்ளிகளுடன் மணிக்கணக்கில் போன்... சித்ரா மீது அடுக்கப்படும் பழிகள்?

சனி, 19 டிசம்பர் 2020 (16:24 IST)
ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சித்ரா மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

 
சில நாட்களுக்கு முன்னர் சின்னத்திரை நடிகர் சித்ரா தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேம்நாத் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
 
இந்நிலையில் ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு குற்றச்சாட்டுகளுடன் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ள சில விஷ்யங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆம், சித்ரா ஏற்கனவே மூன்று ஆண்களை காதலித்ததாகவும், ஏற்கனவே ஒரு முறை நிச்சயதார்த்தம் வரை சென்று அவரது திருமணம் நின்றுவிட்டதாகவும், விஜய் டிவியின் தொகுப்பாளர் ஒருவர் நெருக்கமான புகைப்படங்களை வைத்து சித்ராவை மிரட்டியதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். 
 
மேலும், முக்கிய அரசியல்வாதிகளுடன் தினமும் மணிக்கணக்கில் சித்ரா போன் பேசிவார். ஒரு சில எண்களில் இருந்து அழைப்பு வந்தால் சித்ரா பதட்டத்துடன் தனியாக சென்று பேசுவார். சித்ரா தற்கொலை வழகில் ஒரு பக்கமாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் வெளிப்படையான விசாரணை செய்து உணமையை வெளிக்கொண்டு வர வேண்டும் என கோரியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்