4 இல்ல 40 கல்யாணம் கூட பண்ணிப்பேன் - மேடையில் எகிறிய வனிதா!

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (11:52 IST)
நடிகை வனிதா விஜயகுமாருக்கு இதுவரை 3 முறை திருமணம் நடந்துவிட்டது. ஆகாஷ், ஆனந்தராஜன், பீட்டர் பால் என மூன்று பேரை முறைப்படி திருமணம் செய்துக்கொண்டு குறிப்பிட்ட காலங்கள் வாழ்ந்து பின்னர் விவாகரத்து செய்துவிட்டார்.
 
வனிதா திருமணம் செய்வதும் பின்னர் விவாகரத்து செய்வதும் தீபாவளி, பொங்கல் போன்று ஆகிவிட்டது. வருடத்திற்கு ஒருவர் என ஆளை மாற்றிக்கொண்டே போகிறார். அந்தவகையில் சமீபத்தில் காமெடி நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் மாலை மாற்றிக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வனிதா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
திருமண கோலத்தில் இருந்த இந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்ஸ் பலரும் 4வது திருமணம் ஆகிடுச்சா...? சிக்குனாண்டா சேகர் என பவர் ஸ்டாரை ஒட்டு ஓட்டுன்னு ஒட்டித்தள்ளியுள்ளனர். இந்நிலையில் இந்த கிண்டல்களுக்கெல்லாம் பதிலளித்த வனிதா மேடையிலே நிரூபர் ஒருவரின் கேள்விக்கு,  "4 இல்ல 40 கல்யாணம் கூட பண்ணிப்பேன் " என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்