கன்னத்தோடு கன்னம் உரசிய வனிதா பவர் ஸ்டார் - காறித்துப்பிய லக்ஷ்மி ராம்கி!

வெள்ளி, 23 ஜூலை 2021 (19:55 IST)
நடிகை வனிதா விஜயகுமாருக்கு இதுவரை 3 முறை திருமணம் நடந்துவிட்டது. ஆகாஷ், ஆனந்தராஜன், பீட்டர் பால் என மூன்று பேரை முறைப்படி திருமணம் செய்துக்கொண்டு குறிப்பிட்ட காலங்கள் வாழ்ந்து பின்னர் விவாகரத்து செய்துவிட்டார்.
 
வனிதா திருமணம் செய்வதும் பின்னர் விவாகரத்து செய்வதும் தீபாவளி, பொங்கல் போன்று ஆகிவிட்டது. வருடத்திற்கு ஒருவர் என ஆளை மாற்றிக்கொண்டே போகிறார். அந்தவகையில் தற்போது நேற்றைய முன்தினம் காமெடிய நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் மாலை மாற்றிக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வனிதா வெளியிட்டு பராபரை ஏற்படுத்தினார். 

திருமண கோலத்தில் இருந்த இந்த புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்ஸ் பலரும் 4வது திருமணம் ஆகிடுச்சா...? சிக்குனாண்டா சேகர் என பவர் ஸ்டாரை ஒட்டு ஓட்டுன்னு ஒட்டித்தள்ளியுள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீ போன்று பரவி வர தற்போது இந்த புகைப்படத்தை வைத்து இருவரும் கன்னத்தோடு கன்னம் உரசுவதுபோல் எடிட் செய்த புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளது. இதனை லட்சுமி ராமகிருஷ்ணன் பார்த்து நக்கலாக சிரித்து கமெண்ட் செய்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்